Friday 15 July 2011

                                             2012 - தான் உலகத்தின் இறுதி வருடமா ?

இந்துமத கால கணக்குப்படி நான்கு யுகங்கள் உண்டு என்று நமக்கு தெரியும்.  இதில் கிரேதா யுகத்திற்கு 17,28,000 ஆண்டுகள் உண்டு,  திரேதாயுகத்திற்கு 12,95,000 ஆண்டுகள் உண்டு,  துவாபரயுகத்திற்கு 8,64,000 ஆண்டுகள் உண்டு, தற்போது நடந்து வரும் கலியுகத்திற்கு மொத்த வயது 4,32,000 ஆண்டுகள் ஆகும்.  கலியுகம் பிறந்து இப்போது 5,110 வருஷம் தான் ஆகிறது.  இன்னும் 4,26,890 வருடங்கள் முடிந்த பிறகு தான் கலியுகத்தின் ஆயுள் முடியும்.  அப்போது தான் பிரம்மாவிற்கு பகல்முடிகிறது  இரவு வரும். அதாவது பிரம்மாவின் இரவு என்பது உலகத்தின் அழிவு அல்லது செயல்படாத நிலை என்பதாகும்.  அதனால் அதுவரை இயற்கை நியதிப்படி உலகம் அழியாது,  நாமாக அணுகுண்டை போட்டு கொண்டால் தான் உண்டு அதற்கு இயற்கையும்,  இறைவனும் பொறுப்பு ஏற்க முடியாது.

Tuesday 12 July 2011

தமிழ் மொழிப் பணித்தியத்தின் வரலாறு



துன் முத்தாஹிர் இடை நிலைப்பள்ளி 17 சனவரி 1968-ஆம் ஆண்டு  திறப்பு விழா கண்டது. அதிகமான மாணவர்கள் மலாய் இனத்தவரும், சீன இனத்தவரும் ஆவர்.இந்திய மாணவர்கள் சிறு பான்மையனராக இருந்ததால், தமிழ் மொழிப்பாடம் இங்கு கற்றுத்தரப்படவில்லை. அதன்பின் மதிப்பிற்குரிய ஐயா திரு ஆனந்தகுமார் அவர்கள் இடை நிலைப்பள்ளிகளின் தமிழ்ப்பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டவுடன், அவர் இப்பள்ளிக்கு பகுதி நேர ஆசிரியர்கள் தமிழ் கற்றுத்தர   ஆவன செய்தார். இதற்கிடையில், ஆசிரியை உமாதேவி இப்பள்ளிக்கு ஜூன் 2006-இல் மாற்றலாகி வந்தார். தமிழ் ஆசிரியரான இவர், 2007-இல்  நிரந்தரமான தமிழ் வகுப்பு ஒன்றினை தோற்றுவைத்தார். தொடர்ந்து தமிழ் மொழிப் பணித்தியமும், தமிழ் மொழிக் கழகமும் ஆரம்பிக்கப்பட்டன.