Tuesday, 16 August 2011

அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் நன்றி.

இன்பமே சூழ்க, எல்லாரும் வாழ்க.வணக்கம்.

தமிழ் மொழிக் கழகம் நடத்திய பண்பாட்டு விழா மற்றும் பெற்றோருடன் ஒரு சந்திப்பு நிகழ்வு இனிதே நடந்தேறியது.ஏறக்குறைய 30 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் வந்திருந்தனர். மொத்த வருகையாளர்கள் 95 பேர்கள்.

பேச்சாளர்களான மேஜர் சேகர், திரு நாகேந்திர ராவ் மற்றும் திரு ஆனந்தகுமார் அனைவரும் மகத்தான உரையை ஆற்றினர். அவர்களின் உரை பெற்றோர்களின் மன மாற்றத்திற்கு துணை செய்தது என்பதை நிகழ்ச்சி முடிந்தவுடன் கண்கூடாக அறிந்தேன். நிகழ்ச்சிக்கு ஆதரவு தந்து உதவிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு வேலாயதன் அவர்களுக்கும், தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது போல, அந்த இறைவனின் அருளின்றி இந்நிகழ்வு இவ்வளவு சிறப்பாக நடந்திருக்க முடியாது.அவருக்கும் நன்றி.

நிகழ்ச்சி முடிந்தவுடன், சில பெற்றோர் நிகழ்ச்சி பிரமாதமாக இருந்தது என்று கூறினர்.சில பெற்றோர்கள் வரவில்லை.ஆராய்ந்து பார்த்ததில், பெற்றோருக்காகக் கொடுக்கப் பட்ட கடித்தை மாணவர்கள் அவர்களிடம் கொடுக்கவில்லை. பிரச்சனைக்குரிய மாணவர்களே அவ்வாறு செய்திருந்தனர்.

எது எப்படி ஆயினும், இந்நிகழ்வு பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மேல் அன்பும், அக்கறையும் கொண்டுள்ளனர் என்பதை நிருபித்து விட்டது. நம் பிள்ளைகள் நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால், பெற்றோர்கள் அவ்வப்போது பள்ளிக்குச் சென்று அவர்களைப் பற்றி ஆசிரியர்களிடம் விசாரிக்க வேண்டும்.இன்பமே சூழ்க,எல்லாரும் வாழ்க.

வாழ்க நம் தமிழ்மொழி;வெல்க நம் மாணவர்கள்;வளர்க நம் சமுதாயம்....ஓம் தத் சத்.

No comments:

Post a Comment